புதிய வளைய பக்கத்தில் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் 25 மொழிகளில் உள்ளது.

புதிய வளைய பக்கத்தில் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் 25 மொழிகளில் உள்ளது.

இந்த வலைதள பக்கத்திலும் நேரடி தொடர்பு இலக்கத்திலும் உங்கள் மொழியிலேயே உங்கள் கேள்விகளுக்கு விடை பெறலாம். 25 மொழிபேசக்கூடியவர்கள் எங்கள் நேரடித்தொடர்பு இலக்கத்திலும் வலைய உரையாடல் சேவையிலும் இருப்பார்கள். எல்லா நாட்களிலும் மணி 14-16 க்கிடையிலுள்ள காலத்தில் நீங்கள் பேசியோ எழுதியோ உங்கள் மொழி பேசுபவர்களுடன் தொடர்புகொள்ளலாம். இவர்களுக்கு சுகாதாரத்துறையின் டென்மார்க்கில் கொரோனவைரஸ் பற்றிய அதிநவீன தகவல்கள் மூலம் பெரும்பாலான உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

மணி 14-16 முன்னோ பின்னோ உங்கள் கேள்விகளை எழுத்துமூலம் அனுப்பினால் எங்கள் சக ஊழியர்கள் அதிகபட்சமாக அடுத்தநாள் மணி 14-16 கிடையில் விடை கிடைக்கும். வலைதள பக்கத்தில் சில குறிப்பிட்ட செய்திகளும் டேனிஷ் அதிகாரிகளிடமிருந்து முக்கிய நடைமுறைகள் இதில் இருக்கும்.

வலைதள பக்கத்துக்கு டேனிஷ் அகதிகள் உதவி மையமும் அல்ஸ் ஆராய்ச்சியும் பொறுப்பாக இருப்பார்கள். இம்முயற்ச்சிக்கு நோவோ நோர்டிக் நிதிமையம் நிதியுதவி செய்கிறார்கள். நாங்கள் மத்திய டேனிஷ் அதிகாரிகளுடன் ஒத்துழைப்போடு உங்களுக்கு கிடைக்கும் தகவல்கள் அதி நவீனமானதும் சரியானதென்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம்.