டென்மார்க்கை மறுபடியும் திறக்க திட்டம் வந்துள்ளது.

டென்மார்க்கை மறுபடியும் திறக்க திட்டம் வந்துள்ளது.

அரசு முன்வைத்துள்ள 2 ஆம் கட்டத்திற்கமைய  பல தனியார் மற்றும் பொது வேலைத்தளங்களையும் ஸ்தாபனங்களையும் மறுபடியும் திறக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. சுகாதார ரீதியாக பாதுகாப்பான முறையில் பல தனியார் மற்றும் பொது வேலைத்தளங்களையும் ஸ்தாபனங்களின் பணிகள் இருப்பதும் தோற்று வராமலும் இருக்கும் வகையில் நடைபெறவேண்டும். ஒருவருக்கொருவர் இடையே இடைவெளியை      காப்பதிலும்  தனிப்பட்ட சுகாதாரத்தையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

சில்லறை வியாபாரம் முழுமையாக திறத்தல்  – எல்லா கடைகளும் அங்காடிகளும்.

6.-10. ஆம் வகுப்புக்கள் திறத்தல் (18 மே முதல்) பள்ளிகளும் கொமூனும் அங்கங்கு பேசி முடிவெடுப்பார்கள், எந்தெந்த சுகாதார கோட்பாடுகளுக்கமைய செயல்பட வேண்டுமென தீர்மானிப்பார்கள்

நேரில் கலந்து கொள்ளல் அடிப்படையில்  கற்பித்தலும் பரீட்சைகளும் (18. மே )
மேலும் STU, EUD og FGUகல்வி மறுபடி திறத்தல்  (18. மே )

உணவகங்களும் தேநீர் விடுதிகளும் அதுபோன்றவைகளும் திறக்கப்படும்.(18. மே )

எல்லா வழிபாட்டு ஸ்தலங்களும் 18 மே முதல் திறக்கப்படலாம்.

தனியார் ஸ்தாபனங்களில் வீட்டிலிருந்து வேலை செய்தல்.

பார்வையாளர் இல்லாமல் தொழில்ரீதியான விளையாட்டுக்கள்.

வாசகசாலைகளில் பொருட்கள் கொடுத்தல் இரவல் வாங்குதல். (18. மே )

வெளியே செயல்படும் சங்கங்களும் விளையாட்டுகளும்

தனியார் பள்ளிகளில் துவங்கிய திட்டங்களை முடித்தல்.  (18. மே )

வாகனங்களில் சுற்றிப்பார்கக்கூடிய மிருகக்காட்சிசாலைகள் திறக்கலாம்.

அரசாங்கம் அண்டைய நாடுகளுடன் கலந்தாலோசித்து தற்காலிக எல்லைக்கட்டுப்பாடுகளையும் அதற்கமைய பயணத்தடையும் அது தொர்பான கட்டுப்பாடுகள்பற்றி  1. ஜூன் 2020 க்கு முன்னர்  முடிவெடுக்கும்.